திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் கார்த்திக் மோகன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை
Apr 02, 2021
4029
அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளரான மோகனின் மகனும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளருமான கார்த்திக்கின் வீட்டிலும், காலை 8 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.3 வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து சோதனை நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. இதையறிந்து அப்பகுதியில் திரண்ட திமுகவினர், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.தொடர்ந்து அவர்கள் கார்திக் வீட்டின் முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அதிக அளவில் வந்து அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன், அவரது மகன் கார்த்திக் இருவரும் வீட்டிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News